×

குரூப் -4 தேர்வுக்கான முழு அறிவிப்பாணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி: இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை

சென்னை: குரூப் -4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. மொத்தம் 6,491 பணியிடங்களுக்கான முழு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, குரூப் -4 தேர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது. வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப தேதியை நாளிதழ்களில் வெளியிட்டிருந்தது. அதில் குரூப்-4 தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 14ம் வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பணியிடங்களுக்கான முழுமையான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. எனவே தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்திலும் அல்லது www.tnpscexam.net இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மொத்தமாக 6,491 பணியிடங்களுக்கான அறிவிப்பாணை தற்போது வெளியாகியுள்ளது. அதில் வி.ஏ.ஓ பணிக்கு 397 காலிப்பணியிடங்களும், இளநிலை உதவியாளர் பணிக்கு 2,688 காலிப்பணியிடங்களும் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து வரைவாளர், தட்டச்சு, குறுக்கெழுத்து தட்டச்சு ஆகிய பணியிடங்களுக்கும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தக்கூடிய தேர்வுகளில் அதிகபட்சமான தேர்வர்கள் விண்ணப்பிக்கக்கூடிய தேர்வு குரூப் -4 தேர்வு. கடந்த ஆண்டுகளில் 17 லட்சம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வருடமும் அந்த அளவுக்கு விண்ணப்பங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிப்பாணையில், இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தரவரிசையின் அடிப்படையில் மட்டுமே கலிப்பாணியிடங்களுக்கான சேர்க்கையை நடத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Tags : announcement ,Group-4 , Group-4 Selection, Announcement, TNPSC
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...