×

மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் எதிரொலி: நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

டெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர் மீது தாக்கல் நடத்தப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வறு மாநிலங்களில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், மேற்குவங்கம் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல ஹைதராபாத்தில் மருத்துவர்கள் பேரணியாக சென்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் கடந்த திங்கள் கிழமை நோயாளியின் உறவினர் ஒருவர் இளம் மருத்துவர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த ஐந்து நாட்களாக மேற்குவங்க மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று, கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் அங்கிருந்தவர்கள் எங்களுக்கு நியாயம் வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால் கோபமடைந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். அடுத்த 4 மணி நேரத்தில் பணிக்கு திரும்பாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 4 மணி நேர கெடு முடிந்தும் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து, மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவகல்லூரி பேராசியர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அனைத்து நோயாளிகளையும் தயவுசெய்து கவனித்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும், என்.ஆர்.எஸ் மருத்துவமனையின் மருத்துவர்களோ, மருத்துவக்கல்லூரி மாணவர்களோ போராட்டத்தை கைவிட மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தி வருவதால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்:

மேற்குவங்கத்தில் மருத்துவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தலையில் ஹெல்மெட் மற்றும் பேண்டேஜ் அணிந்தவாறு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து டெல்லியில் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருந்தனர். அதேபோல மருத்துவர்கள் சங்கமும் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் வேதனை அளிக்கிறது.

தாக்குதலைக் கண்டிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனை முன்பாக அனைத்து மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை அனைவரும் தலையில் பேண்டேஜ் கட்டியவாறு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதேபோல, குடியிருப்பாளர்கள் மருத்துவர்கள் சங்கமும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொல்கத்தாவிலும் வேலை நிறுத்த போராட்டம்:

இதனைத்தொடர்ந்து, கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகம் முன்பாக  போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள வடக்கு பெங்கால் மருத்துவக்கல்லூரி மருத்துவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதையடுத்து, ரெய்ப்பூரில் உள்ள Dr. Bhimrao Ambedkar மருத்துவமனை மருத்துவர்கள் நீதி வேண்டும் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றன்றனர்.

ஹைதராபாத் மருத்துவர்கள் பேரணி:

அதேபோல,  தெலுங்கானாவில் மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நிசாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அனைவரும் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

நாக்பூர் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்:


நாக்பூரில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களை கைகளில் Save the Saviour & Stand with NRSMCH என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் போராட்டம்:

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜிப்மர் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் புறநோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளப்பட்டுள்ளனர்.


Tags : Doctors ,country , Doctors struggle
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை