தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவு: நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி

நாகை: தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. நாளை அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லவுள்ளனர். மேலும் மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதையொட்டி நாகை மாவட்டத்தை சேர்ந்த 2000 மீனவர்கள் விசைப்படகுடன் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தயாராகி வருகின்றனர். இதையடுத்து மீன்பிடி தடைக்காலத்தில் படகுகள், வலைகள், மீன்பிடிப்பு உபகரணங்களை பராமரிப்பதற்காக மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படும் என்பது மீனவர்களின் கோரிக்கை ஆகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தயாராகி வருகின்றனர். மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை இதுவரை அரசு வழங்கவில்லை என்று மீனவர்கள் குற்றசாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக தமிழகம் முழுவதும் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க விசைப்படகு மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த 61 நாள் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைவது என்பது  குறிப்பிடத்தக்கது.


× RELATED தங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில்...