×

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோளில் 6.5 ஆக பதிவு

கோகிம்போ: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது. நேற்று நள்ளிரவு சுமார் 0.19 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். கோகிம்போ நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

கோகிம்போ நகரில் இருந்து சுமார் 76கி .மீ  தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்க குறித்த சேதங்கள் குறித்தோ, உயிர் பலிகள் குறித்தோ தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து ட்சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.


Tags : earthquake ,Chile , LT-Chile-Earthquake, Chile, South America, Latin America and Caribbean, General news, Accidents and disasters, Earthquakes, Natural disasters
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்