இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேச தடை: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் பேசும் போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். தமிழில் பேச கூடாது. என்று தெற்கு ரயில்வே அதிகாரி சிவா நேற்று இரவு அதிரடியாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். தமிழகத்தில் இந்தியை திணிக்க மும்மொழி கொள்கையை மத்திய அரசு கொண்டு வர முனைந்தது. ஆனால் தமிழகத்தில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக புதிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்து, இந்தி கட்டாயமல்ல என்று தெரிவித்தது. இந்தநிலையில் சமீபத்தில் நடந்த மின்துறை தேர்வில் 35க்கும் மேற்பட்ட தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர் தேர்வு எழுதி பாஸ் ஆகினர். அவர்களுக்கு சுத்தமாக தமிழ் தெரியாது. இதனால் மின்வெட்டு, மின்சார பிரச்னை உட்பட உள்ளூர் பிரச்னைகள் எழும்பேது அவற்றை உடனுக்குடன் கையாண்டு மக்கள் பிரச்னையை தீர்க்க முடியாது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மின்துறை அமைச்சர் மழுப்பலாக பதிலளித்து எஸ்கேப் ஆனார். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் மாவட்டம் ஒன்றில் ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர் தமிழில் அருகில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் ரயில் எந்த தண்டவாளத்தில் இயக்கபட வேண்டும் என்று தெளிவாக கூறினார். அதை கேட்ட ஸ்டேஷன் மாஸ்டர் அப்படியே ரயிலை அவர் குறிப்பிட்ட தண்டவாளத்தில் இயக்குவதாக தெரிவித்தார். இந்தநிலையில், ரயில்நிலைய கட்டுப்பாட்டாளர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொன்னரா புரிந்து கொள்ள முடியாத இந்தி பேசும் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் ரயிலை ரயிலை அதே தண்டவாளத்தில் இயக்க உத்தரவிட்டார்.

இந்த இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் நேர் எதிராக வந்து கொண்டிருந்தது. இதைபார்த்த பொதுமக்கள் அலறியடித்து சத்தம் போட்டனர். மக்களின் கூச்சலை கேட்டு இரண்டு ரயில் ஓட்டுனர்களும் உடனடியாக ரயிலை அப்படியே நிறுத்தினர். இதனால் மாபெரும் விபத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் காப்பாற்றப்பட்டனர். நேற்று கூட, விவசாயி ஒருவர் டிக்கெட் வாங்க முயன்றபோது கவுண்டரில் இருந்த இந்தி பேசும் நபர் விவசாயி சொல்லும் ஊரின் பெயரை புரிந்துகொள்ள முடியாமல் வேறு ஊருக்கு டிக்கெட் கொடுத்து விட்டார். இதையடுத்து அருகில் இருந்த நபர் கவுண்டரில் இருந்து இந்திகாரனின் தவறை சுட்டிகாட்டினார். இதுபோன்று தமிழகம் முழுவதும் ரயில்வே துறைக்குள்ளவும் பொதுமக்களிடத்திலும் இந்தி மொழி பேசுபவர்கள் பெரும் தொல்லை தரும் நபர்களாகவே மாறிவிட்டனர். இதனால் இந்தி பேசுபவர்களை அந்தந்த மாநிலங்களுக்கு மாற்றிவிட்டு தமிழ் தெரிந்தவர்களை தெற்கு ரயில்வேவில் பணி அமர்த்தி இருக்க வேண்டும். ஆனால் தெற்கு ரயில்வே தற்போது ஆபத்தான மற்றும் அபாயகரமான முடிவை எடுத்துள்ளது. அது, பயணிகளுக்கும் துறைக்குள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கு மூலகாரணமாக இருக்க போகின்றது என்று இந்தி எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். இந்தநிலையில், சென்னை கோட்டத்தை சேர்ந்த தெற்கு ரயில்வே அதிகாரி சிவா என்பவர் அனைத்து, ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் ரயில்வே தொடர்பான பணிகள், ரயில் இயக்கம், ரயில் வந்து செல்லும் அறிவிப்பு ஆகியவற்றை ஆங்கிலம் அல்லது இந்தியில் மற்றும் செய்ய வேண்டும். இருவரும் இந்தியிலையே பேசிக்கொள்ள வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தமிழ் மொழியில் ரயில்வே தொடர்பான விஷயங்களை பேசக்கூடாது. இதை தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்களும், ஸ்டேசன் மாஸ்டர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் பிராந்திய மொழியான தமிழில் பேச கூடாது. இதை அப்படியே பணியில் இருக்கும் வரை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இது குறித்து, இந்தி எதிர்பாளர்கள் கூறுகையில், ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே வேலைகளை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி போராடி வருகிறோம். ஆனால் தற்போது இந்தி தெரியாத வேறு மாநிலத்தவரை பணியில் அமர்த்தி தமிழை பேச கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டு  இருப்பது, தமிழை இழிவு படுத்துவது போல் உள்ளது. இது கண்டனத்திற்குரியது. இவ்வாறு கூறினர். 


Tags : Railway officials ,announcement ,Southern Railway , Hindi ,speak , English, speak , Tamil,Railway Notice
× RELATED 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான...