தேயிலைத்தூளிலில் ரசாயனம் கலந்ததாக கூறி தேயிலை தொழிற்சாலை சீல்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே தேயிலைத்தூளிலில் ரசாயனம் கலந்ததாக கூறி தேயிலை தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டுள்ளது. சூலூர் பகுதியில் உள்ள எம்.ஜி தனியார் தேயிலை தொழிற்சாலையில் தேயிலையில் சிகப்பு வண்ண ரசாயனம் கலக்கப்படுவதாக தேயிலை வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தேயிலை உற்பத்தி நேர்க்கொள்ளும் பிரிவில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தேயிலையில் கலக்க வைத்திருந்த சாயம் மற்றும் சர்க்கரை கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த விசாரணையில் இங்கு தயார் செய்யப்பட்டு குன்னுர் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரசாயனம் கலந்த தேயிலை தூள் உட்பட சுமார் 40 டன் தேயிலை தூள் பறிமுதல் செய்யப்பட்டது. தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் தொழிற்சாலை உரிமத்தை ரத்து செய்ய தேயிலை வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Tags : Tea, chemicals, tea factory, seal
× RELATED கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த கருஞ்சிறுத்தை