×

புதிய கல்விக் கொள்கை மீது ஆய்வு : சென்னையில் கல்வி அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: டெல்லியில் அடுத்த வாரம் நடக்க உள்ள புதிய கல்விக் கொள்கை மீதான கருத்துகேட்பு கூட்டத்தில் தமிழகம் சார்பில் கருத்து கூறுவது தொடர்பான ஆய்்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.   சென்னை கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் இந்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. சிபிஎஸ்இ முன்னாள் தென் மண்டல இயக்குநர் பாலசுப்பிரமணின் தலைமை தாங்கினார். ஆய்வுக் கூட்டம் குறித்து பாலசுப்பிரமணியன் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வரைவு திட்டத்தில் பல சீரிய சிந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக தற்ேபாது இருக்கின்ற 10+2+3 திட்டத்தை மாற்றி 5+3+3+4 என்ற முறையில் கல்வி திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.  இதனால் குழந்தைகள் 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிக்கும் வரை உள்ள கல்விக்கான கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும்.   கல்வியை பொதுவாக குழந்தைகள், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிக்கவும், மாணவர்கள் தாங்கள் விரும்பும்  பாடங்களை அவர்களே  தெரிவு செய்து படிக்கவும் இந்த புதிய கல்விக் கொள்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இது தவிர  உடற்கல்வி, இசை போன்ற மனம் மற்றும் உடலியல் சார்ந்த கல்வி மீது அதிக ஆர்வத்தை கொண்டு வரும்  வகையிலும்,  கணக்கு அறிவியல் பாடங்கள் மட்டுமல்லாமல், அதைத் தாண்டி அவர்கள்  நல்ல மனிதனாக வளர்வதற்கு தேவையான திட்டங்கள் இந்த புதிய கல்விக் கொள்கையில் கொண்டு வரப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில் நுட்ப   ஆர்வத்தை வளர்க்கும் அளவில் அறிவுரைகள், வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை என்பது புதிய நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இது ஒரு வரைவுத் திட்டம் தான்.  மாநில அளவிலும் தேசிய  அளவிலும்  கருத்து கேட்கப்பட்ட பிறகு, எப்படி வரும் என்பதை  பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  இவ்வாறு முன்னாள் இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.



Tags : Consultant ,Chennai , Study , academic policy,authorities,chennai
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...