அதிமுகவில் இணைந்த தீபா பேரவையினர்

சென்னை:. திருச்சி மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் மீன்கடை சுலைமான், மாநகராட்சி முன்னாள் உறுப்பினர் தில்சாத் பேகம் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தீபா பேரவையில் இருந்து விலகிய பாலக்கரை பகுதி செயலாளர் அமலா பாபுராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேற்று சென்னையில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.அப்போது, சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிவபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.Tags : Deepa Congregations ,Chief Minister , Deepa ,Congregations,Chief Minister
× RELATED முதல்வர் பதவியை ராஜினாமா...