×

தமிழக கவர்னர் பன்வாரிலாலை நேற்று முன்தினம் சந்தித்த நிலையில் முதல்வர் எடப்பாடி இன்று டெல்லி பயணம்: பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திக்க திட்டம்?

சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் திடீரென சந்தித்து பேசினார். இந்த நிலையில், முதல்வர் இன்று டெல்லி செல்கிAdayir Central Kailash Junction Road
Back to the giant crater: motorists shockedறார். அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்று வற்புறுத்த திட்டமிட்டுள்ளார்.தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. தற்போதுள்ள இரட்டை தலைமையை மாற்றி விட்டு, ஒற்றை தலைமையை நியமிக்க வேண்டும் என்று எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.எதிர்பாளர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர். ஒற்றை தலைமை குறித்தோ, தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட யாரையும் கட்சி தலைமை பேச அனுமதி அளிக்கவில்லை. இதனால், மிகவும் எதிர்பார்ப்போடு தொடங்கிய அதிமுக கூட்டம் ஏமாற்றத்துடன் முடிந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை அவரது மாளிகையில் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் ஜெயக்குமார், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

கடந்த திங்கட்கிழமை கவர்னர் டெல்லி சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து விட்டு சென்னை வந்துள்ளார். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி, தமிழக கவர்னரை சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.இந்த சந்திப்பின்போது என்ன பேசினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக ஆட்சி அமைந்துள்ளது. அதனால் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதியை பெற்றுத்தர தமிழக கவர்னர் என்ற முறையில் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்தும், தமிழக நிதி தேவை குறித்தும் கவர்னரிடம் எடப்பாடி விளக்கியதாகவும் கூறப்படுகிறது.இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். 15ம் தேதி (நாளை) டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி, அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர். டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டாலும், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேச நேரம் கேட்டிருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

அப்படி சந்திக்க நேரம் கிடைத்தால், தமிழக அரசியல் நிலவரம் குறித்து மோடி, அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி நேரில் விளக்க திட்டமிட்டுள்ளார். மேலும், கடந்த ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு சார்பில் தர வேண்டிய சுமார் ₹40 ஆயிரம் கோடியை ஒவ்வொரு துறை சார்பில் விடுவிக்க பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளார். அதேபோன்று, தற்போது தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. தமிழக அரசுக்கு டாஸ்மாக் மற்றும் வணிகவரித்துறை (ஜிஎஸ்டி) மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது, அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதற்கே சரியாக உள்ளது. தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு பணம் இல்லாத சூழ்நிலை உள்ளது. அதனால், தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஆயோக் கூட்டம் மூலம் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் வர்தா புயல், ஓகி புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதம் அதிகளவில் இருந்தது. இதற்காக மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டது. ஆனாலும் குறைந்தளவு நிதியே இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வைத்த கோரிக்கைபடி, கூடுதல் நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார். அடுத்து, தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு இன்னும் செயல்படாமல் உள்ள அல்லது ஆமை வேகத்தில் நடைபெறும் மத்திய அரசு திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மோடி மற்றும் அமித்ஷாவிடம் முதல்வர் எடப்பாடி வலியுறுத்த திட்டமிட்டுள்ளார். அதனால், முதல்வர் எடப்பாடி டெல்லி பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



Tags : Amit Shah ,Narendra Modi , governor ,Tamilnadu ,Oommen Chandy
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...