×

மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சிறு வணிகர்களுக்கு 25 ஆயிரம் கடன்: அமைச்சர் தகவல்

சென்னை: சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் 69வது கிளையை மதுரவாயலில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று திறந்து வைத்து, சிறுவணிக கடன், சுயஉதவி குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், பணிபுரியும் மகளிர் கடன் மற்றும் நகை கடன் என 432 பயனாளிகளுக்கு 1.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் கூட்டுறவு, உணவு மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா,  கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:தமிழகத்தில் 196.38 கோடி பங்கு மூலதனத்துடன் சென்னை மத்திய கூட்டுறவு வங்கி  செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மூலம் 147 நாட்களில் திரும்ப செலுத்தும் வகையில் சிறுவணிக கடனாக தனிநபர் ஒருவருக்கு 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

அதன்படி, 2018-19ம் ஆண்டில் 6,630 பேருக்கு ₹13.18 கோடி சிறுவணிக கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சுயஉதவி குழு கடனாக 10 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. தனிநபர்களுக்கு அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை குறைந்த வட்டியில் நகைக்கடன் அளித்து வருகிறது. 2018-19ம் ஆண்டில் 1,14,162 பேருக்கு ₹1,075.12 கோடி நகைக்கடன் அளித்து வருகிறது. ராயபுரத்தில் வங்கிக்கு சொந்தமான இடத்தில் 108 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டவும், போரூர், சோழிங்கநல்லூர். கொருக்குப்பேட்டை ஆகிய இடங்களில் புதிய கிளைகள் திறந்திடவும், அண்ணாநகர் புளூஸ்டார் கிளையில் தானியங்கி பாதுகாப்பு பெட்டக வசதி அமைத்திடவும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.



Tags : businesses ,Minister ,Central Cooperative Bank , Central, Cooperative Bank, Minister
× RELATED முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...