×

புழல் சிறை வளாகத்தில் பெட்ரோல் பங்க் திறப்பு; 30 கைதிகளுக்கு வேலை

சென்னை: சிறை கைதிகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையில், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து புழல், வேலூர், கோவை, பாளையங்கோட்டை மத்திய சிறைகள் மற்றும் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி ஆகிய 5 இடங்களில் புதிய பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்படும் என சிறைத்துறை நிர்வாகம் அறிவித்தது.அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் புழல் தவிர மற்ற 4 இடங்களில் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் பெட்ரோல் பங்குகளை திறந்து வைத்தார். இந்நிலையில், புழல் சிறை காவலர்கள் குடியிருப்பில் புதிய பெட்ரோல் பங்க்கை நேற்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதில் 3 பெட்ரோல் நிரப்பும் இயந்திரங்கள், 3 டீசல் நிரப்பும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை கண்காணிப்பதற்காக 2 அலுவலர்களும், 3 தலைமை காவலர்களும், 7 முதல் நிலை காவலர்களும், 2ம் நிலை காவலர்கள் 2 பேரும் நியமிக்கப்பட்டுளள்னர். இந்த பெட்ரோல் பங்க் வளாகத்தில் தனியார் ஏடிஎம் மையம், ஆவின் பாலகம், சிறை கைதிகளால் செய்யப்பட்ட சிறப்பு அங்காடியும் நிறுவப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்கில் ஒரு ஷிப்ட்டுக்கு 10 கைதிகள் என மூன்று ஷிப்ட்டுக்கு 30 பேர் பணிபுரிவார்கள்.
திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறை கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், செந்தாமரைகண்ணன் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர். முதலில் பெட்ரோல், டீசல் போட்டவர்களுக்கு இனிப்பு, மற்றும் கீ செயின்கள் வழங்கப்பட்டன.



Tags : Petrol punk opening ,prisons ,detainees , prisons, prisons, Petrol punk , 30 detainees ,work
× RELATED சிறைவாசிகளின் நலனுக்காக பார்வையாளர்கள் நியமனம்