×

தோல்விக்கு அனைவரும் பொறுப்பு ‘அனாதை பிள்ளைக்கு அப்பன் யாரென்று தேடக்கூடாது’: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

திருச்சி: கூட்டணி தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அனாதை பிள்ளைக்கு அப்பன் யாரென்று தேடக்கூடாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருச்சி விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவில் ஒற்றை தலைமை அமித்ஷாதான் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி கர்நாடக அரசு வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி  தண்ணீரை திறந்துவிடும். இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கும் பொறுப்புண்டு. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். ஆனால் தோல்வியை சந்தித்தோம்.

தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.  அனாதை பிள்ளைக்கு அப்பன் யாரென்று தேடக்கூடாது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா என்பது பற்றி தேர்தல் அறிவித்தவுடன் அறிவிக்கப்படும். கூட்டணி தொடருமா, தொடராதா என்பதை நான் சொல்ல மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார். அதிமுக தோல்விக்கு பாஜவுடன் கூட்டணி வைத்ததே காரணம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ள நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Anantha ,Ponadirathiranan , responsible , child, Ponnathirakaran
× RELATED “வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு அரசால்...