×

காப்பக பெண்கள் 86 பேரின் சான்றிதழ்களை வழங்க உத்தரவு

மதுரை: காப்பக பெண்கள் 86 ேபரின் சான்றிதழ்களை வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த கிடியோன் ஜேக்கப் என்பவர் நடத்தி வந்த காப்பகத்தில், பெற்றோரால் கைவிடப்பட்ட ஏராளமான குழந்தைகள் தங்கி படித்தனர். இங்கு குழந்தைகளை வௌிநாட்டிற்கு அழைத்து சென்று முறைகேடாக  வருவாய் ஈட்டுவதாக பாடம் நாராயணன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும், மாவட்ட சமூக நலத்துறை காப்பகத்தை ஏற்று நடத்தவும் உத்தரவிடப்பட்டது.இதுதொடர்பான மற்றொரு வழக்கில், காப்பகத்திலிருந்த பலர் மேஜரான நிலையில், அவர்கள் மேற்படிப்பை தொடரும் வகையில் அவர்களது சான்றிதழ்களை வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் காப்பகத்திலுள்ள பல மேஜரான  பெண்கள் ஐகோர்ட் கிளையில் ஒரு மனு செய்திருந்தனர்.

அதில், எங்களது சான்றிதழ்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர். இதனால் எங்களால் மேல்படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களது  பிளஸ் 2 மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், காப்பகத்திலுள்ள 86 பெண்களின் சான்றிதழ்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.


Tags : women , Archive, women, Order , certificates
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...