×

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சை கருத்து ஆயிரம் ஆண்டு சம்பவத்தை இப்போது ஏன் பேசவேண்டும்?: இயக்குநர் ரஞ்சித்துக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்

மதுரை: ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இப்போது ஏன் பேசவேண்டும் என இயக்குனர் ரஞ்சித்துக்கு ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்தது. தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் கடந்த 5ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் ரஞ்சித், மன்னர் ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில், பேசியதாக பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து திருப்பனந்தாள் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், தனக்கு முன்ஜாமீன் கோரி இயக்குநர் ரஞ்சித், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் தாளைமுத்தரசு ஆஜராகி, ‘‘ரஞ்சித் பேசியது வேண்டுமென்றே தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே, முன்ஜாமீன் வழங்க ேவண்டும்’’ என்றார்.

அப்ேபாது அரசுத்தரப்பில் கடும் ஆட்ேசபம் ெதரிவிக்கப்பட்டது. ‘‘தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் ேபசி வருவதாக போலீசுக்கு புகார்கள் வருகிறது’’ என கூறப்பட்டது. வக்கீல் முத்துக்குமார் தரப்பில் வக்கீல் நீலமேகம் ஆஜராகி,  ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து மனு செய்தார்.அப்போது நீதிபதி, ‘‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன? தேவதாசி முறை அந்த காலத்தில் பரவலாக இருந்துள்ளது. தற்போது அது ஒழிக்கப்பட்ட நிலையில் இப்ேபாது ஏன் அதை  ேபச வேண்டும்? திட்டங்களுக்காக இப்போதும் கூட நிலங்கள் ைகயகப்படுத்தப்படுகிறதே? ஏன் ராஜராஜசோழனை மட்டும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அவர் சிறந்த மன்னராக அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் ெகாள்ளப்பட்டவர். அவரை  விமர்சித்து இப்போது ஏன் ேபச ேவண்டும். இதுபோன்ற தேவையில்லாமல் கருத்து சொல்வதை தவிர்க்கலாமே’’ என்றார்.இதையடுத்து, மனுதாரரை இப்ேபாதைக்கு கைது செய்யமாட்டோம் என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசுத் தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 19க்கு தள்ளி வைத்தனர்.



Tags : Ranjith ,Supreme Court , Controversy,Director Ranjith, Judge denounces,branch
× RELATED இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்: இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி