×

கொள்ளிடம் பகுதியில் சாராயம் விற்கணுமா... மாதம் 10 ஆயிரம் கொடு: எஸ்ஐ மிரட்டல் வாட்ஸ் அப்பில் வைரல்

கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் சாராய வியாபாரியை மிரட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணம் கேட்கும் செய்தி வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. நாகை மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் என்பவர் கொள்ளிடம் பகுதியில் கள்ளச் சாராயம் விற்றுவரும் ஒருவரை மாமூல் கேட்டு மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.  அதில் அந்த நபர் செல்போனில், எஸ்.எஸ்.ஐ.சேகரிடம் ``நான் சொல்லிதான் நீங்க அவரை விட்டுட்டு போகலையே. பாவம் சார் அவன். அதற்கு பதில் அளித்த எஸ்.எஸ்.ஐ.சேகர், மறுநாளோ 3ம் நாளோ போலீஸ்டேசன் வந்திருக்கிறான். அப்பகூட  அவன் என்னை பார்க்கவில்லை. எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவும் இல்லை.

அதுக்கப்புறம் போன மாசமும் காசு கொடுக்க வில்லை. அதுக்கு முதல் மாசமும் காசு கொடுக்க வில்லை. அவன் இப்ப 2 மாசத்துக்கு காசு கொடுக்கனும்.  மாசம் 2000, 3000 அது தேவயில்லை. முன்பு போலீஸ் 15 பேர்தான் இருந்தோம். இப்போ 25 பேர் இருக்கிறோம். மாசம் இன்ஸ்பெக்டருக்கு 5000, போலீசுக்கு 5000 கொடுக்குற மாதிரி இருந்தா விற்கட்டும். இல்லையென்றால் அவன் விற்க  வேண்டாம்’’ இவ்வாறு தொடர்ந்து மாமூலை பெற்று வரும் போலீசார் குறித்த இந்த செய்தி வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கொள்ளிடம் எஸ்.எஸ்.ஐ.சேகர்  நேற்று திடீரென நாகை ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி  உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : area ,Kulidam , Cocktail,10 Lakhs, Month,SI Bullet, Watts
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...