மேட்டுப்பாளையம் அருகே வனத்துறை கூண்டில் சிறுத்தை சிக்கியது: கிராம மக்கள் நிம்மதி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தை அடுத்த மோத்தேபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள மோத்தேபாளையத்தில் கடந்த சில நாட்களாக மலை அடிவார பகுதியில் சிறுத்தை ஒன்று நுழைந்து ஆடு,மாடு மற்றும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வந்தது.

இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கடந்த மாதம் வனத்துறை சார்பில் கேமரா பொறுத்தி தீவிரமாக கண்காணிக்கபட்டு வந்தது. அப்போது, இந்த கிராமத்திற்கு சிறுத்தை வந்து செல்வது உறுதி செய்யபட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், சிறுமுகை வனத்துறையினர் சென்னாமலை அடிவாரத்தில் கூண்டு வைத்தனர்.

இந்நிலையில், நேற்று காலை வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது தெரியவந்தது. பின்னர் சிறுமுகை வனச்சரகர் மனோகரன் தலைமையில் வனத்துறையினர் பிடிபட்ட சிறுத்தையை டெம்போவில் ஏற்றி சத்தியமங்கலம் காப்புக் காட்டிற்கு கொண்டு சென்று விடுவித்தனர். பல மாதங்களாக கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை பிடிபட்டதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags : forest cottage ,forest area ,Mettupalayam , Mettupalayam, forest, cottage in the cage, got trapped
× RELATED தளி அருகே வனத்தையொட்டிய கிராம...