ஒரு கிலோ தங்கத்துடன் 2 வாலிபர்கள் கைது

பாலக்காடு: கோவையை அடுத்த வாளையார் செக்போஸ்ட் அருகே ஜீப்பில் இருந்த அப்துல்ஜஷீர்(26), அஜ்நாஸ்(26) ஆகிய இருவரையும் சோதனையிட்ட போது அவர்கள் திராவக நிலையில் 1 கிலோ 200 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கலால் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஷார்ஜாவில் இருந்து சொந்த ஊரான கோழிக்கோட்டிற்கு வருவதற்காக விமானத்தில் திருச்சி வந்து இறங்கி உள்ளார். தங்கத்தை உருக்கி திராவகமாக மாற்றி ஆணுறையில்(காண்டம்) அடைத்து கடத்தி வந்துள்ளார். பின்னர் கடத்தல் தங்கத்துடன் இருவரும் கேரளா திரும்பும் வழியில் கலால் துறையிடம் சிக்கியுள்ளனர்.


× RELATED றெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின்...