ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களை 25 ஆக பிரிக்கும் பணி துவங்கியது: சொன்னதை செய்கிறார் ஜெகன்

திருமலை: ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களை 25 மாவட்டங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில பிரிவினைக்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள், 175 சட்டப்பேரவை தொகுதிகள், 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

மேலும், அவர் ஏற்கனவே தனது பாத யாத்திரையின் போது முதல்வராக பதவி ஏற்றால் மக்களின் வளர்ச்சிக்கு ஏற்ப தற்போதுள்ள மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்து இருந்தார். அதன்படி, மாநிலத்தில் தற்போதுள்ள 13 மாவட்டங்களை, 25 மாவட்டங்களாக பிரிக்க முடிவு செய்துள்ளார்.

இதற்கான பணிகளை வருவாய்த் துறையினர் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மாநில துணை முதல்வரும், வருவாய்த் துறை அமைச்சருமான பில்லி சுபாஷ் சந்திரபோஸ் கூறுகையில், ‘`முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒவ்வொரு திட்டத்தையும் சரியான முறையில் கையாண்டு வருகிறார். அதன்படி, மாவட்டங்களை பிரிப்பதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பிரிப்பு பணியை முடிக்க எடுக்கப்படும்,’’ என்றார்.

Tags : Jegan ,division ,districts ,Andhra Pradesh , Andhra Pradesh, 13 division, division of 25, began work
× RELATED புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி,...