×

மகளிர் உலக கோப்பை கால்பந்து: நைஜிரியா, ஜெர்மனி, பிரான்ஸ் வெற்றி

பாரிஸ்: பிரான்சில் நடைபெறும் மகளிர் உலக கோப்பை  கால்பந்து போட்டித் தொடரின் லீக் போட்டிகளில் நைஜிரியா, ஜெர்மனி, பிரான்ஸ் அணிகள் வெற்றிப் பெற்றுள்ளன. உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது. இப்போது லீக் சுற்றுப் போட்டிகள் நடக்கின்றன. பி பிரிவு லீக் ஆட்டத்தில் ஜெர்மனி- ஸ்பெயின் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் கிடைத்த வாயப்–்புகளை பயன்படுத்தி பலமுறை கோல் அடிக்க முயற்சி செய்தது ஜெர்மனிதான். அதற்கு முதல் பாதி ஆட்டம் முடியவிருந்த நேரத்தில் அதற்கு பலன் கிடைத்தது. ஆட்டத்தின் 41  நிமிடத்தில் ஜெர்மனியின் நடுகள வீராங்கனை சாரா டேபிரிட்ஸ் அற்புதமாக கோல் அடித்தார். அதன் பிறகு ஸ்பெயின் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் 2வது வெற்றியை பதிவு செய்தது.

முன்னதாக ஏ பிரிவு லீக் போட்டியில் நைஜிரியா-தென்கொரியா அணிகள் விளையாடின. ஆட்டத்தின் 29 நிமிடத்தில் நைஜிரியா வீராங்கனைகள் தென் கொரியா கோல் ஏரியாவில் முற்றுகையிட்டனர். அப்போது கோலை நோக்கி வந்த பந்தை கொரியாவின் பின்கள வீராங்கனை டிஓய் கிம்  தடுக்க முயன்றார். ஆனால் அது சுய கோல் ஆனதால் நைஜிரியா முதல் பாதியில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு 2வது பாதியில் 75வது நிமிடத்தில் ஓஷோளா கோல் அடித்து மீண்டும் அணியை முன்னிலைப்படுத்தினார். போட்டியில் கொரிய அணி ஆதிக்கம் செலுத்தியும் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. அதனால்  நைஜிரியா 2-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பெற்றது. ஏ பிரிவின் மற்றொரு  லீக் போட்டி ஒன்றில் போட்டியை நடத்தும் பிரான்ஸ்-நார்வே அணிகள் மோதின. இரண்டு அணிகளும் சம பலத்துடன் மோதின. ஆனாலும் அவ்வப்போது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பிரான்ஸ் 2 கோல்களையும், நார்வே ஒரு கோலையும் அடித்தது. அதனால் ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.


வெற்றியை ருசிக்காத ஆசிய நாடுகள்

மகளிர் உலக கோப்பை தொடரில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் சீனா, ஜப்பான், ெதன் கொரியா, தாய்லாந்து ஆகியவை ஆசிய நாடுகள். ஏறக்குறைய பாதி லீக் போட்டிகள் முடிந்துள்ளன. ஆனால் இந்த 4 ஆசிய நாடுகளும் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. ஜப்பான் மட்டும் அர்ஜன்டீனாவுடன் டிரா செய்துள்ளது. மற்ற நாடுகள் தோல்வியைதான் சந்திந்துள்ளன.


Tags : Nigeria ,Women's World Cup Football ,France ,Germany , Women's World Cup football, Nigeria, Germany, France
× RELATED ரூ.100 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்