×

பேட்டை கோயில் விழாவில் பக்தி பரவசம்: எருமை பலியிட்டு ரத்தம் குடித்த நரிக்குறவர்கள்

பேட்டை: பேட்டை கோயில் விழாவில் எருமை பலியிட்டு நரிக்குறவர்கள் ரத்தம் குடித்தனர். இந்த சம்பவம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. கோயில் திருவிழாக்களின்போது அம்மன், மற்றும் சுவாமி கோயில்களில் அவர்கள் பாரம்பரிய வழக்கப்படி ஆடு, கோழி, பன்றி போன்ற விலங்குள் பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்துவார்கள். சில ஊர்களில் எருமை மாடுகளும் பலிடுவார்கள். இதுபோன்ற எருமை பலியிட்டு திருவிழா நடத்தும் வழக்கம் நெல்லை பேட்டை நரிக்குறவர்களிடம் உள்ளது. இங்குள்ள நரிக்குறவர் காலனியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் குல தெய்வங்களாக மதுரை மீனாட்சி, கொல்கத்தா பத்திரகாளி, சிவன் ஆகிய தெய்வங்களை வழிபட்டு வருகிறார்கள். இவர்கள் வசிக்கும் பகுதியில் மேற்கண்ட சுவாமிகளை உருவங்களாக செய்து திருவிழா நடத்தி வருகிறார்கள்.

பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த திருவிழா 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தபோது அரசு நிர்வாகம் தடை போட்டது. ஆனால் அவர்கள் போராட்டம் நடத்தியதின் பயனாக நேற்று முன்தினம் கொடை விழாவை தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் அன்று சிவனுக்கு ஆடு பலியிட்டு வழிபட்டனர். இதுபோல் நேற்று மாலை மாவிளக்கு ஏற்றினர். இதைத்தொடர்ந்து எருமை மாடுகள் பலியிடும் நிகழ்ச்சி தொடங்கியது. பலியிடப்போகும் மாடுகளை வரிசையாக நிறுத்தி அதன் கொம்பில் தீப்பந்தம் ஏற்றினர். அதன்பிறகு மஞ்சள். குங்குமம் போன்ற கலவையை மாட்டின் மீது பூசினர். பலியிடப்போகும் மாடுகள் மீது சாமியாடி சூலாயுதத்தால் அதன் வயிற்றில் பாய்ச்சி வதம் செய்தார். அந்த சடங்கு நேற்று இரவு முடிந்ததும் மாடுகள் அப்படியே குற்றுயிரும் குலை உயிருமாக விடப்பட்டன.

இன்று காலை மீண்டும் பலியிடும் நிகழ்ச்சி தொடங்கியது. சூலாயுதத்தால் குத்தப்பட்ட 48 மாடுகளை சாமியாடி அரிவாளால் கழுத்தை அறுக்க தொடங்கினார். அதன்பிறகு ரத்தத்தை குடித்தார். அனைத்து மாடுகளும் அறுக்கப்பட்டதால் அந்த இடம் ரத்த குளமாக காட்சியளித்தது. இந்த சடங்கு முடிந்ததும் மதுரை மீனாட்சிக்கு 60 ஆடுகளை பலியிட்டனர். அதன்ரத்தத்தை சாமியாடி மட்டுமின்றி விரதமிருந்த பக்தர்களும் குடித்து பூக்குழி இறங்கினர். இவர்களின் வினோத திருவிழாவை அப்பகுதியைச்சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பார்த்து மெய்சிலிர்த்தனர்.

Tags : hut temple festival , Pettu Temple Festival, Buffalo, Blood Drinks
× RELATED ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி...