×

கடந்த 19 ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாத நெல்லை இரட்டைப் மேம்பாலம்: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

நெல்லை: நெல்லையில் உள்ள இரண்டடுக்கு மேம்பாலம் முறையாக 19 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசியாவில் முதல் இரண்டடுக்கு மேம்பாலம் என்ற பெருமைக்குரியது திருநெல்வேலி திருவள்ளுவர் இரட்டைப் மேம்பாலம் ஆகும். நெல்லையில் அமைந்துள்ள இந்த பாலம் தான் இந்தியாவிலேயே முதல் முதலாக கட்டப்பட்ட இரட்டைப் மேம்பாலமாகும். ஆசியாவிலேயே ரயில் பாதையின் குறுக்கே அமைக்கப்பட்ட முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்ற பெருமைக்குரிய சிறப்பு இந்த பாலத்திற்கு உண்டு.

இந்த பலமானது 1969-ல் அன்றைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பாலம் 47 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு 1923-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் தேதி திறந்துவைக்கப்பட்டது. திருக்குறள் போன்று இரண்டு அடுக்குகளை கொண்டு கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளதால் இந்த பாலத்திற்கு திருவள்ளுவர் இரட்டைப் மேம்பாலம் என்றும் பெயர் சூட்டப்பட்டது. 25 குறுக்கு தூண்கள் இந்த பாலத்தை தாங்கி நிற்கிறது. இந்த பாலத்தில் முதல் அடுக்கில் மிதி வண்டிகளும், இரண்டு சக்கர வாகனங்களும் செல்கின்றன. மேலடுக்கில் பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்கின்றன.

பாலம் கட்டப்பட்டு 27 ஆண்டுகளுக்கு பிறகு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 1 கொடியே 45 லட்சம் செலவில் பாலம் சீரமைக்கப்பட்டு மேலும் 2000-ம் ஆண்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு 19 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் பாலம் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.  இந்த பாலத்தின் கீழ் பாலம் சந்திப்பு பகுதியில் முறையாக பராமரிக்கப்படாததாலும், கழிவுநீர் ஓடைகள் அமைக்கப்படாததுனாலும் மழைநீர் தேங்கி கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ள்ளது. கடந்த 19 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பழமை மாறாமல் பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Nellai ,community activists , 19 years, uninterrupted, rice dew
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!