×

புதுச்சேரியில் 3 மாதங்களாக ஏ.சி. இயந்திரத்திற்குள் இருந்த பாம்பு வனத்துறையினரால் மீட்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏ.சி. இயந்திரத்திற்குள் பாம்பு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏ.சியை பொருத்தும் போது விழிப்புணர்வோடு இல்லாவிட்டால் இதுபோன்று நிகையும் என்கிறார்கள் வனத்துறையினர். புதுச்சேரி தேங்காய்திட்டு சாய்ஜீவா சரோஜினி நகரை சேர்ந்த ஏழுமலை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவரது வீட்டு படுக்கையறையில் உள்ள ஏ.சி. இயந்திரத்தை இயக்கும்போதெல்லாம் வித்யாசமான சத்தம் வந்துள்ளது. அதனால் ஏ.சி. பழுதடைந்து விட்டதோ என நினைத்த ஏழுமலை அதனை சரி செய்ய மெக்கானிக்கை அழைத்துள்ளார். அப்போதுதான் ஏ.சிக்குள் பாம்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும்  பாம்பை பிடிப்பதற்காக வனத்துறையினர் ஏ.சி. இயந்திரத்தை திறக்கும் போது தான் அதிர்ச்சி ஏற்பட்டது.

ஏனெனில் ஏ.சிக்குள் 3 பாம்பு தோள்கள் இருந்துள்ளன.அதனால் அந்த பாம்பு 2, 3 மாதங்களாக அங்கு இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து ஒருமணி நேரம் முயற்சிக்கு பிறகு வனத்துறையினர் பாம்பை மீட்டனர். வீடுகளில் ஏ.சி. பொருத்தியபின் அதற்காக சுவர்களில் ஏற்படுத்தப்பட்ட துளைகளை முறையாக அடைத்தால் மட்டுமே இதுபோன்ற ஆபத்துக்களை தவிர்க்க முடியும் என்கிறார்கள் ஏ.சி. மெக்கானிக்குகள். மேலும் கோடை காலத்தில் பாம்பு போன்ற ஊர்வனங்கள் குளிர்ச்சியான இடங்களை தேடி செல்லும் என்பதால் ஏ.சி. பயன்படுத்துவோர் முன்னெச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் என்கிறார்கள் வனத்துறையினர்.


Tags : Snake Forest Department , Puducherry, 3 months, AC Machine, Snake, Forest, recovery
× RELATED ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாடு...