இயக்குநர் பா.ரஞ்சித்தை வரும் 19-ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்ற கிளை தடை

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித்தை வரும் 19-ம் தேதி வரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. ராஜ ராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து முன்ஜாமீன் கோரி ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை 19-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்துள்ளது.


× RELATED பேச்சுரிமைக்கு வரம்பு இல்லையா?...