புதுக்கோட்டை ஆளப்பிறந்தான் கிராமத்தில் சட்டவிரோத மணல் குவாரி வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

மதுரை: புதுக்கோட்டை ஆளப்பிறந்தான் கிராமத்தில் சட்டவிரோத மணல் குவாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறந்தாங்கியைச் சேர்ந்த வக்கீல் முருகானந்தம் தொடர்ந்த வழக்கில் புதுக்கோட்டை ஆட்சியருக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆளப்பிறந்தான் கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளாற்றில் இரவு பகலாக மணல் கொள்ளை நடைபெறுவதாக மனுதாரர் புகார் அளித்திருந்தார்.


Tags : ruler village ,Pudukottai , Illegal, sand quarry case , Pudukottai ruler village, Order ,file a report
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆழ்குழாய்...