×

பாஜகவின் வெற்றி கண்ணியம் இல்லாதது : ரேபரேலியில் சோனியா காந்தி சாடல்; வாக்காளர்களை கவர சூழ்ச்சிகள் செய்ததாகவும் குற்றச்சாட்டு

ரேபரேலி: பாஜக அரசு கண்ணியத்தின் எல்லைகளை மீறி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைந்துள்ளதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் படுதோல்வி

மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில்  ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே காங்கிரசால் வெற்றி  பெற முடிந்தது. அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பாஜ.வை சேர்ந்த ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.  

ரேபரேலி தொகுதிக்கு சோனியா காந்தி பயணம்

ரேபரேலி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முதல் முறையாக நேற்று தனது தொகுதிக்கு சென்றார். அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அவருடைய  மகளுமான  பிரியங்கா காந்தியும் வந்தார்.பர்சட்கன்ஞ் விமான நிலையத்தில் வந்திறங்கிய சோனியா, பிரியங்கா காந்தியை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.

வாக்காளர்களுக்கு சோனியா காந்தி நன்றி


பின்னர் அங்கு வாக்காளர்களுக்கு சோனியா காந்தி நன்றி தெரிவித்தார். அங்கு நடைபெற்ற பேரணியின் போது பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாக நமது தேர்தல் நடைமுறைகளில் ஏராளமான சந்தேகங்கள் எழுந்து வருவதாக தெரிவித்தார். கண்ணியத்தின் எல்லைகளை மீறி பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருப்பது மிக பெரிய துரதிருஷ்டம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். வாக்காளர்களை கவர பாஜக அனைத்து சூழ்ச்சிகளையும் கையாண்டதாக குற்றம் சாட்டிய சோனியா காந்தி, தேர்தலில் நிலைநாட்டப்பட்டது நீதியா அல்லது அநீதியா என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.


Tags : victory ,BJP ,Sonia Gandhi ,Rae Bareli ,voters , Uttar Pradesh, Congress, Bhuttovi and Sonia Gandhi
× RELATED அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார்?.....