×

சென்ட்ரல், பாரிமுனை, மெரினாவில் வழிப்பறி எஸ்.ஐ மீது மோதிவிட்டு பைக்கில் தப்ப முயன்ற 2 சிறுவர்கள் கைது: கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு

பாரிமுனை: சென்னை ஓட்டேரி, தாசன் மகால், பர்கத் தெருவை சேர்ந்தவர் குல்பான் ஷெரீப் (21). பைக் மெக்கானிக். இவருக்கு அரவாணிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தலைமை செயலகம் அருகே கொடிமர சாலையில் பைக்கில் சென்றார். அப்போது அங்கிருந்த அரவாணிகளிடம் நெருக்கமாக பேசி கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில், அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேர் குல்பான் ஷெரீப்பை சரமாரியாக தாக்கி செல்போன், வாட்ச் மற்றும் ரூ.1000 பணத்தை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து ரோந்து பணியில் இருந்த பூக்கடை போலீசாரிடம் குல்பான் ஷெரீப் புகார் செய்தார். உடனே வயர்லெசில் தகவல் தெரிவித்துவிட்டு, வேப்பேரி வரை போலீசார் துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை.

அடுத்த சில மணி நேரங்களில் அக்கும்பல் மீண்டும் சென்ட்ரல் அருகே ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட வந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துரத்தியதும், அக்கும்பல் வடக்கு கடற்கரை சாலை வழியே தப்ப முயன்றது. அங்கு எஸ்.ஐ மற்றும் போலீசார் வாகன சோதனையில் இருந்தனர். அப்போது எஸ்.ஐ மீது மோதிவிட்டு, பேரிகார்டு இடித்து பைக் கவிழ்ந்ததில் 3 பேரும் கீழே விழுந்தனர். 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

ஒருவன் தப்பி விட்டான். விசாரணையில் வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் குடிசைமாற்று குடியிருப்பை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் என தெரிந்தது. மேலும், இரவு நேரங்களில் சென்ட்ரல், பாரிமுனை, மெரீனா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியே நடந்து செல்பவர்களிடம் செல்போன், பணம் மற்றும் பொருட்களை பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். தப்பிய வாலிபரை தேடி வருகின்றனர்.


Tags : boys ,Central ,Kelly ,Reform School ,Marina , Central, Parimunai, Marina, pedestrian, boys, arrested
× RELATED ஆட்டையாம்பட்டி அரசு பள்ளியில் நூதனம்...