உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பாக். விளம்பரத்துக்கு எழுந்தது கண்டனம்

புதுடெல்லி: வரும் 16ம் தேதி இந்திய - பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பை போட்டியில் மோதும் நிலையில், விங் கமாண்டர் குறித்து பாகிஸ்தான் தரப்பில் விளம்பரம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்திய அணி இரு அணிகளுடன் மோதி வெற்றி பெற்றது. தொடர்ந்து, வரும் 16ம் தேதி இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான விளம்பரங்களை பாகிஸ்தான் ஊடகம் ஒளிபரப்பியது. இந்த விளம்பரம் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விளம்பரத்தில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனைப் போல மீசை வைத்துக் கொண்டு ஒருவர் வருகிறார். அப்போது, இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில் இந்தியாவின் உத்தி என்ன? என்று அவரிடம் கேள்வி  கேட்கப்படுகிறது. அதற்கு அந்த நபர், ‘இதுகுறித்து உங்களிடம் நான் கூற முடியாது. மன்னிக்கவும்’ என்று பதில் கூறுகிறார்.

அவர் பேசும்போது கையில் டீ கப் ஒன்றும் உள்ளது. மேலும் அவர் இந்திய அணியின் நீல நிற ஜெர்சி அணிந்துள்ளார். ஏற்கனவே, விங் கமெண்டர் அபிநந்தன் பாகிஸ்தானிடம் பிடிபட்டபோது அவர் டீ அருந்துவது போன்ற வீடியோ வைரலாக பரவியது. இதனை மையப்படுத்தியே இப்போது இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ குறித்து இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags : World Cup ,cricket match ,promotion , World Cup, cricket match, Pak. Advertising, arose, condemned
× RELATED உலகக் கோப்பை சிலம்பப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்