×

அதிமுகவில் ராதாரவி

சென்னை: நடிகர் ராதாரவி 2002-2006 காலகட்டத்தில் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார். சிறிது காலம் அதிமுகவிலிருந்து விலகியிருந்த அவர் 2010ல் மீண்டும் அக்கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடிகர் ராதாரவி திமுகவில் இணைந்து கழக பணி ஆற்றி வந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக படவெளியீட்டு விழாவின் போது நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சை ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, தன்னை அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ உடன் இருந்தார்.

Tags : admk, Radaravi
× RELATED ராஜஸ்தானில் பரபரப்பு; சுயேச்சை, உதிரி...