உபி வக்கீல் சங்க பெண் தலைவர் சுட்டுக்கொலை

ஆக்ரா: உத்தரப் பிரதேச வக்கீல்கள் சங்கத்தின் முதல் பெண் தலைவரான தர்வேஷ் சிங் மற்றொரு ஆண் வக்கீலால் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப் பிரதேச வக்கீல்கள் சங்க தேர்தல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் ஆக்ராவைச் சேர்ந்த பெண் வக்கீலான தர்வேஷ் சிங், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உபி. வக்கீல்கள் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற  பெருமையை அவர் பெற்றார்.இந்நிலையில், நேற்று மதியம் ஆக்ரா நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தர்வேஷ் சிங் வந்தார். மதியம் 2.30 மணி அளவில், அங்கு வந்த மற்றொரு வக்கீலான மணிஷ் சர்மா என்பவர், திடீரென தன்னுடைய துப்பாக்கியால் மூன்று முறை  தர்வேஷ் சிங்கை சுட்டார். இதில் அதே இடத்தில் அவர் இறந்தார்.

இதையடுத்து, அதே துப்பாக்கி மூலம் மணிஷ் சர்மா தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கிவிழுந்தார்.  நீதிமன்ற வளாகத்தில் நடந்த இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயம் அடைந்த மணிஷ் சர்மா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.தர்வேஷ் சிங்குக்கும், மணிஷ் சர்மாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதில்தான் மணிஷ் சர்மா, அவரை சுட்டுக் கொன்றுள்ளார்.× RELATED வைகோ மீதான தேச துரோக வழக்கில் ஜூலை 5-ல்...