×

ஓகியால் ஓட்டையானது ஓயாத கோரிக்கையும் பயனற்றது: உயிர் பலிக்கு காத்திருக்கும் அரசு பள்ளி... ஆளூரில் மாணவர்கள் அச்சம்

திங்கள்சந்தை: தக்கலை கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட ஆளூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இது உயர்நிலைப்பள்ளியாக இருந்து வந்தது. அதன் பிறகு தரம் உயர்த்தப்பட்டது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளாக மேல்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பள்ளி கட்டடங்கள் அனைத்தும் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இந்த பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், இதர பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பொதுத்தேர்வில் இந்த பள்ளி மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று 95 சதவீத தேர்ச்சியை அளித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்திலேயே அரசு ெதாடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே கடந்த 2016ம் ஆண்டு வீசிய ஓகி புயல் குமரியை நிைலகுலைய செய்தது. இதற்கு ஆளூர் அரசு மேல் நிலைப்பள்ளி கட்டிடமும் தப்பவில்லை. அந்த பள்ளியிடன் கட்டிடம் கடுமையாக சேதமடைந்தன.

சேதம் அடைந்த கட்டிடத்தை சீரமைக்க பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி வளர்ச்சிக்குழு ஆகியவை பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மாணவர்களின் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் வேணு கூறியது: ஓகி புயலால் சேதமான பள்ளி கட்டிடம் தொடர்ந்து பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் நாளுக்கு நாள் கட்டிடம் வலுவிழந்து வருகிறது. ஆகவே தங்களது குழந்தைகளை இந்த பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பொது மக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.


Tags : government school , Okay, unreasonable request, bio, government school
× RELATED கட்டணம் பெறப்படுவதாக புகார் அரசு பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு