கோவையில் நடைபெற்ற சோதனையில்,இலங்கை குண்டுவெடிப்புடன் ஒருவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிப்பு

கோவை: கோவையில் நடைபெற்ற சோதனையில்,இலங்கை குண்டுவெடிப்புடன் ஒருவருக்கு தொடர்பு உள்ளது என தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் உள்ளிட்ட 6 பேரிடம் இருந்து 14 செல்போன்கள்,29 சிம்கார்டுகள்,10 பென் டிரைவ், 3 லேப்டாப், 6 மெமரி கார்டு,4 ஹார்டு டிஸ்க் பறிமுதல் செய்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Coimbatore ,Sri Lankan , Coimbatore, check, Sri Lanka blast
× RELATED திண்டுக்கல் அருகே பெருங்கற்கால கல்லறைகள் கண்டுபிடிப்பு