×

அதிகாரப் போட்டியால் மணிமுத்தாறு அணை பராமரிப்பு, தூர்வாரும் பணிகள் பாதிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்று மணிமுத்தாறு அணை. 5511 மில்லியன் கனஅடி கொள்ளளவு உடைய இந்த அணையில் 118 அடி வரை நீரை தேக்கலாம். இதன் மூலம் தெற்கு வீரவநல்லூர், கரிசல்பட்டி மற்றும் பச்சை ஆறு, பாசனம் பெறாத நாங்குநேரி தாலுக்காவின் வடக்கு பகுதிகள்  திசையின் விலை ஆகிய பகுதிகளில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. இது தவிர குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது. மணிமுத்தாறு அணையை பராமரிப்பது மற்றும் தண்ணீர் திறந்து விடுவது ஆகிய பணிகளை பொதுப்பணித்துறை செய்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் இந்த அணை கொண்டுவரப்பட்டது.

வனத்துறையின் மூலம் சுற்றுலாத்தலமாகவும் இந்த அணை மாற்றப்பட்டது. இதன் பிறகு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளும் தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதனால் அணை பராமரிப்பு, கால்வாய்கள் தூர்வாருதல் ஆகியவற்றிக்கு வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டியிருப்பதால் பராமரிப்பு பணிகள் தாமதமாகப்படுவதாக கூறப்படுகிறது. மணிமுத்தாறு அணை இருந்த பகுதியில் ஒரு கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயம் நடைபெற்று வந்தது. இந்த கால்வாயிலிருந்து விவசாய தேவைகளுக்காக பெருங்கால் மதகிற்கு தண்ணீர் வருகிறது. இந்த மதகு மணிமுத்தாறு அணை 40 அடிக்கு கீழ் நீர் வரும்போது பொதுப்பணித்துறையினரால் சீரமைக்கப்படும்.

தற்போது அணையின் நீர்மட்டம் குறைந்த போதும் கூட அணையை தூர்வார முடியாத சூழல் இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி மணிமுத்தாறு அணை பகுதியில் விவசாயம் இல்லாத நேரத்தில் அப்பகுதியில் மீன் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இங்கு மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் விவசாய நிலங்களில் விவசாயம் செய்யப்படாத வேளைகளில் ஒரு சிறு வருவாய்க்காக நடத்தப்பட்டு வந்த மீன்பிடி தொழிலும் தற்போது நின்றுவிட்டதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றன. இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு அதிகார குழப்பத்தை சரி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றன.  


Tags : Nellai, Power Competition, Manimutharu Dam, Maintenance, Due to Work, Damage
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக...