வைர வியாபாரி நீரவ் மோடியை ஜாமினில் விடுவிப்பது தொடர்பான வழக்கு: இங்கிலாந்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

இங்கிலாந்து: வைர வியாபாரி நீரவ் மோடியை ஜாமினில் விடுவிப்பது தொடர்பான விசாரணையில் இங்கிலாந்து வேல்ஸ் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்க உள்ளது. நீரவ் மோடியை ஜாமினில் விட்டால் சாட்சிகளை மிரட்டுவார் என்றும் சரணடைய மாட்டார் என்றும் வெளிநாட்டுக்கு தப்பி செல்வர் என்றும் இங்கிலாந்து அரசு தரப்பில் வாதம் முன்வைக்கபட்டது. ஆனால் இதனை மறுத்த நீரவ் மோடியின் வழக்கறிஞர் கிளார் மான்ட்கோமரி, நீரவ் மோடி விக்கிலீக்ஸ் அசாஞ்சே போன்ற சக்தி வாய்ந்த மனிதர் அல்ல, அவர் ஒரு சாதாரண வைர வியாபாரி என்று வாதித்தார்.

லண்டனை விட அவருக்கு பாதுகாப்பான இடம் வெளிநாட்டில் கிடைக்காது என்றும் அவர் வாதித்தார். 84 நாட்கள் சிறையில் கழித்துள்ள நீரவ் மோடியின் ஜாமின் மனுக்கள் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தால் 3 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் 4வது முறை ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீரவ் மோடியை இந்திய அழைத்து வருவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.  Tags : release ,diamond dealer ,Niran Modi ,The UK High Court , UK, diamond merchant, waterproof, bail, jail, jail, high court judgment today
× RELATED மேலவளவு படுகொலை வழக்கு ஆயுள் கைதிகள் 13...