×

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தூய்மை பணி மேம்படுத்த தனித்துறை உருவாக்கப்படுமா?

இந்தியாவில் 6 ஆயிரத்து 853 ரயில் நிலையங்கள் உள்ளன. இதன் மூலம் சராசரியாக சுமார் 2 கோடியே 30 லட்சம் பேர் தினசரி ரயில்களில் பயணிக்கிறார்கள். பயணிகளால் குவியும் குப்பைகள் அப்புறப்படுத்தி ரயில்களையும், ரயில் நிலையங்களையும் தூய்மையாக வைத்திருப்பது ரயில்வேத் துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதனை பயணிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின் போதிய ஒத்துழைப்புடன் ரயில்வே சமாளித்து வருகிறது.

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பயணிகளின் வசதிக் காக துப்புரவு மற்றும் தூய்மை பணிகளை மேம்படுத்த தனித்துறை ஒன்றை ரயில்வே வாரியம் உருவாக்க வேண்டுமென பயணிகள் மற்றும் ரயில்வே தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் மாநில துணை பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகையில், 24 மணி நேர தொடர் பராமரிப்பு தேவைப் படும் சென்னை சென்ட்ரல், எக்மோர் போன்ற ஏ1 தர நிலையங்கள் 8, கூடுதல் பராமரிப்பு தேவைப்படும் ஏ தர நிலையங்கள் 42 , பி தரத்தில் 26, சிதரத்தில் 75 , எப் வரை உள்ள மற்ற தரங்களில் 584 என தெற்கு ரயில்வேயில் மொத்தம் 735 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் ஏ1 நிலையங்கள்- 6 ,ஏ நிலையங்கள்- 35, சி தர நிலையங்கள்- 23 என மொ த்தம் 64 நிலையங்களை ரயில்வேயின் மருத்துவத்துறை பராமரிக்கிறது. கடந்த 2017 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுப்புற வீட்டு பராமரிப்பு திட்டத்தில் ஏ1 தர நிலையங்கள் இரண்டும் , எ தர நிலையங்கள் ஏழும் சோதனை முறையில் பரா மரிக்கப்பட்டு வருகின்றன.

இது போக 31 நிலை யங்களை வர்த்தகத் துறையும், 630 நிலையங்களை போக்குவரத்து துறையும் பராமரிக்கின்றன. நாள் ஒன்றுக்கு கோட்டங்கள் வாரியாக மதுரை- 922, பாலக்காடு- 344, சென்னை- 230, திருவனந்தபுரம்- 253, சேலம்- 146, திருச்சி- 149என மொத்தம் 2044ரயில் பெட்டிகள் தெற்கு ரயில்வே நவீன இயந்திரங்கள் உதவியுடன் சுத்தம் செய்கிறது. இவற்றை மெக்கானிக்கல் துறை மேற்கொள்கிறது. ஒடும் ரயில்கள் சுத்தம் செய்யும் திட்டத்தில் 109 ரயில்களையும் , கிளின் டிரெயின் ஸ்டேஷன் முறையில் சென்ட்ரல், எக்மோர், ஈரோடு நிலையங்களில் நின்று போகும் ரயில்களையும் தனியார் காண்ட்ராக்ட் மூலம் சுத்தம் செய்து வருகிறது. கடந்த 2018-19ம் நிதியாண்டு, 1600க்கும் மேற்பட்ட வழக்குகள் மூலம் குப்பைகளை பொறுப்பு இல்லாமல் கண்ட இடங்களில் வீசிய பயணிகளிடம் இருந்து தெற்கு ரயில்வே 3.75 லட்சம் அபராதமாக வசூலித்து எச்சரித்தது. பாலித்தீன் பைகள் உப யோகம் தடை செய்ப்பட்டதில் குப்பைகள் சற்று குறைந்தும் இருக்கிறது.

ரயில்வேயின் பல்வேறு துறைகளிடம் கூடுதலாக துப்புரவு மற்றும் தூய்மை பணிகள் ஒப்படைக்கப்பட்டு இருப்பதால் அந்தந்த துறைகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதோடு, மேற்பார்வையாளர்கள், அதிகாரிகள் கூடுதல் பணிச்சுமையால் சிரமப்படுகிறார்கள். முழுநேரமும் தூய்மைப் பணிகள் மேற் கொள்ள வேண்டிய கட்டாயம் ரயில்வேக்கு இருக்கிறது.எனவே ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் தூய்மை மேம்பாட்டுக்கு தனியாக ஒரு துறையை ரயில்வே அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்றார்.

ஒடும் ரயில்கள் சுத்தம் செய்யும் திட்டத்தில் 109 ரயில்களையும், கிளின் டிரெயின் ஸ்டேஷன் முறையில் சென்ட்ரல், எக்மோர், ஈரோடு நிலையங்களில் நின்று போகும் ரயில்களையும் தனியார் காண்ட்ராக்ட் மூலம் சுத்தம் செய்து வருகிறது.

கடந்த 2018-19ம் நிதியாண்டு, 1600க்கும் மேற்பட்ட வழக்குகள் மூலம் குப்பைகளை பொறுப்பு இல்லாமல் கண்ட இடங்களில் வீசிய பயணிகளிடம் இருந்து தெற்கு ரயில்வே 3.75லட்சம் அபராதமாக
வசூலித்து எச்சரித்தது.

Tags : country ,railway stations , Rail, purity
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!