×

வேலூர் அருகே தனியார் காலனி தோல் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் காலனி தோல் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உயிரிழந்தனர் மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மணியாரக்குப்பம் பகுதியில் விபத்தானது நிகழ்ந்துள்ளது. ஆம்பூர் தனியார் காலனி தொழிற்சாலைக்கு வேன் மூலம் ஆட்களை அழைத்து செல்வது வழக்கம். இவ்வாறாக ஆட்களை ஏற்றி சென்ற வேன் ஒன்று ஆம்பூர் மணியாரக்குப்பம் பகுதியில் விபத்துக்குள்ளானது. மேலும் அச்சாலையை ஒரு பெண் கடக்க முயன்றதாகவும் வேகமாக வந்த வேன் ஆனது  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

கவிழ்ந்ததில் வாகனத்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த வாகனத்தில் 12 நபர்கள் மட்டுமே அழைத்து செல்ல வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆனால் இந்த வாகனத்தில் 30க்கும் மேற்பட்டோர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதிக பாரத்தை ஏற்றி சென்றதினாலே வேன் ஆனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விபத்தில் உஷா, மற்றும் சிவகாமி ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்திலே உயிர் இழந்துள்ளனர். மேலும் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், 20 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : colony ,Vellore , Vellore, private colony factory, people, van dies, accident, 2 killed
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...