×

பத்திரிகையாளர் கைது: ராகுல் காந்தி எதிர்ப்பு

புதுடெல்லி:  உத்தரப் பிரதேச முதல்வர் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்  கனோஜியா கைது செய்யப்பட்டதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார். உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே பெண் ஒருவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியதாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இந்த வீடியோ காட்சியை நொய்டாவை சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா, டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்தார். இதைத் தொடர்ந்து, கனோஜியா கைது செய்யப்பட்டார். இதற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தவறான புகாரை பதிவு செய்த மற்றும் போலி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை ஆர்எஸ்எஸ், பாஜ ஆதரவாளர்கள் சிறையில் அடைத்தால், பெரும்பாலான பத்திரிகைகளும், செய்தி சேனல்களும் ஊழியர்கள் பற்றாக்குறையை தான் எதிர்கொள்ளும். உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நடவடிக்கை முட்டாள்தனமானது. உடனடியாக கனோஜியாவை விடுதலை செய்ய வேண்டும்,’ என்று கூறியுள்ளார். பிரியங்கா குற்றச்சாட்டு: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டிவிட்டர் பதிவில், ‘பத்திரிகையாளர்கள், விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசின் மீது  அச்சத்தை  உருவாக்கும் முயற்சியில் உபி அரசு ஈடுபட்டு வருகிறது’ என்று கூறியுள்ளார்.

Tags : Journalist ,protest ,Rahul Gandhi , Journalist, arrested, and Rahul Gandhi
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...