×

புதுச்சேரிக்கு பரவியது 'நிபா’ வைரஸ் கேரளாவை சேர்ந்தவருக்கு சிகிச்சை

புதுச்சேரி: கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலில் 17 பேர் இறந்துள்ள நிலையில், மீண்டும் அங்கு நிபா வைரஸ் பரவி வருகிறது. இதனால் கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகம், புதுச்சேரியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க மாநில சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளது. கோரிமேடு அரசு மார்பக மருத்துவமனையில் இதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவை ஒட்டி புதுச்சேரி மாநிலத்தின் மாகே பிராந்திய பகுதி அமைந்திருப்பதால் அங்கு மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவை தொடர்ந்து புதுச்சேரியிலும் நிபா வைரஸ் பரவியுள்ளது. நிபா வைரஸ் அறிகுறியுடன் எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவர், கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் இன்று வெளிவரும் என்றும், அதன்பிறகுதான் நிபா வைரஸ் தாக்கப்பட்டு இருக்கிறதா? என உறுதியாக தெரியவரும் எனவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kerala , Puducherry, 'Niba' Virus, Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...