×

கடனை திருப்பிச் செலுத்துவதில் உறுதியாக இருக்கிறோம்: அனில் அம்பானி திட்டவட்டம்

புதுடெல்லி: தங்களது குழு நிறுவன பங்குகள் விலை சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் பீதி அடைந்துள்ளனர். அவர்களது கவலையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலதிபர் அனில் அம்பானி உறுதி அளித்துள்ளார். அனைத்து கடன் பிரச்னையையும் தீர்க்க தங்களது குழும நிறுவனங்கள் உறுதியுடன் இருப்பதாகவும், காலக்கெடுவுடன் இந்த கடன்கள் அடைக்கப்படும். ஏற்கனவே கடந்த 14 மாதங்களில் ரூ35,000 கோடி கடன் நிலுவை செலுத்தப்பட்டுள்ளது. மிகுந்த சவால்கள் நிறைந்த காலகட்டத்தில், எந்த ஒரு நிதி ஆதரவும் இல்லாத சூழ்ந லையில், கடன் அசல் தொகை ரூ.24,800 கோடி, வட்டி தொகை ரூ10,600 ஆகியவை கடந்த 2018 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2019 மே 31ம் தேதிக்குள் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

“ஆதாரம் இல்லாத தகவல்கள், வதந்திகள், ஊகங்கள் போன்றவை கடந்த சில வாரங்களாக ரிலையன்ஸ் குழும நிறுவனங்களைச் சுற்றி சுற்றி வருகின்றன. இதனால், ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இதனால், எங்கள் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களின் கவலையை போக்கவேண்டியது எங்களது கடமை” என்று அனில் அம்பானி கூறியுள்ளார். ரிலையன்ஸ் கேபிட்டல், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்பெரா மற்றும் அதன் துணை நிறுவனங்களின் கடன் சுமையை குறைக்கும் விதத்தில் ரூ35,000 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. குழும நிறுவனங்களின் எஞ்சிய கடன் தொகையை முழுவதும் உரிய கால கட்டத்தில் திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதநால், முதலீட்டாளர்கள் யாரும் பீதி அடையவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை என்றும் உறுதி அளித்துள்ளார். “ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த சில நிறுவனங்களின் கடன் பிரச்னைகள், நீதிமன்றங்கள், நீதிமன்றங்கள், ஒழுங்குமுறை நிறுவனங்களில் இருந்தன. இவற்றை விசாரித்து தீர்ப்பதற்கு நீண்ட காலதாமதம் ஆனதால், குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் கடன் சுமை ரூ.30,000 கோடிக்கு மேல் அதிகரித்துவிட்டது” என்றும் அனில் அம்பானி குற்றஞ்சாட்டினார்.

Tags : Anil Ambani , Loan, Anil Ambani, Project
× RELATED அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில்...