×

ஜி20 மாநாட்டிற்கு பின்னர் சீனா மீது மேலும் அதிக வரி: டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்:  அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டுவரும் விதத்தில் வாஷிங்டனில் 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு தர்ப்பு வர்த்த துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆனால், கூட்டத்தில் எந்த முடிவும் எட்டவில்லை. ஜப்பானின் ஓசாகாவில் இந்த மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கவே அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தின் பிற்பகுதியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் சீன அதிபருடன் தான் நடத்தும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லையென்றால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் வரி விதிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜி 20 மாநாட்டுக்கு பின்னர் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாவிட்டால், சீனாவுக்கு மேலும் பாடம்  புகட்டும் வகையில் குறைந்தது 30,000 கோடி டாலர் மதிப்புள்ள  சீனப்பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Trump Announcement ,China ,G20 , G20 Conference, China, Trump
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்