×

மாதவரம் பால் பண்ணை பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து

திருவொற்றியூர்: மாதவரம் பால்பண்ணை சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பீதியில் செல்கின்றனர். மாதவரம் பால்பண்ணை - மஞ்சம்பாக்கம் இணைப்பு சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினமும் பைக், கார், லாரி, பஸ்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் இவ்வழியே சென்று வருகின்றன. சமீப காலமாக இச்சாலையில் மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிவதால், வாகனத்தில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.

சாலையில் கூட்டமாக செல்லும் மாடுகள் திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி சாலையின் குறுக்கே ஓடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர். இதனால், மாடுகள் கூட்டமாக செல்லும்போது கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மேலும், பல இடங்களில் மின் விளக்கு எரியாமல், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதுபோன்ற நேரங்களில் சாலையில் உலா வரும் மாடுகள் மீது வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதை தடுக்க மாதவரம் மண்டல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : deaths ,road ,mawaravaram dairy farm , Accidental deaths, road ,mawaravaram dairy farm
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...