சிவன் கோயிலில் தேரோட்டம்: பக்தர்கள் பங்கேற்பு

சிவகாசி: சிவகாசி சிவன் கோயிலில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் வைகாசி திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11  நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பூத வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் என ஒவ்வொரு நாளும் சுவாமி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் விஸ்வநாதசுவாமி, விசாலாட்சி அம்மனுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து  இழுக்க நான்கு ரத வீதிகளில் தேர் ஊர்வலம் வந்தது. கோயில் பட்டர் சுப்பிரமணியம் சிறப்பு பூஜை நடத்தினார். திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.Tags : Devotees , Lord Shiva Temple, Thermal, Devotees
× RELATED பழநி வரும் பக்தர்களை குறிவைக்கும் போலி கைடுகள்