நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு  அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று முதல் அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 கனஅடியாக  இருந்தது. தொடர் மழை காரணமாக நேற்று நீர்வரத்து வினாடிக்கு 163 கனஅடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை  அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 325 கனஅடியாக மேலும் அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து  வெளியேற்றப்படும் நீரின் அளவு இன்று காலை முதல் வினாடிக்கு 70 கனஅடியில் 100 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.15 அடி.  அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 325 கனஅடி. அணையிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு 1,255 மில்லியன் கனஅடி.  
வைகை அணையின் நீர்மட்டம் 33.83 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 60 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு 543 மில்லியன் கனஅடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 84.13  அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு 43.07 மில்லியன் கனஅடி.  மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.00 அடி. அணைக்கு நீர்வரத்து  இல்லை. நீர் வெளியேற்றமும் இல்லை. அணையின் இருப்பு 137.53 மில்லியன் கனஅடி.
 
இன்று காலை வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: பெரியாறு 26.6, தேக்கடி 24.6, கூடலூர் 15, பாளையம் 3, வீரபாண்டி 5, வைகை 0.6, சோத்துப்பாறை 2, மஞ்சளாறு 2.

Tags : Periyar ,dam ,catchment areas , Catchment, rain, piranaru dam, water supply
× RELATED தற்போது அணையின் நீர்மட்டம் 77 அடியாக சரிந்துள்ளது.