×

தேனி, நெல்லை, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தேனி, நெல்லை, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சராசரியாக 5 செ.மீ. மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் வெப்பநிலை குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயல் குஜராத்தை நோக்கி நகர்ந்து செல்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டங்களில் 3-வது நாளாக மழை பெய்து வருகிறது. கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் 3-வது நாளாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் கன்னியாகுமரியில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

வட மாவட்டங்களில் அனல்காற்று

சென்னை உள்பட வட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : rainfall ,Nellai ,Theni ,Coimbatore ,districts ,Weather Research Center ,Kanyakumari , Tamil Nadu, Southern District, North District, Heavy Rain, Heat, Meteorological Center
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!