×

சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

சேலம்: சேலத்தில் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். எட்டுவழிச்சாலை அமைப்பதற்கு ஏற்கனவே உய்ரநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது மேலும் அதே தடையை உச்சநீதிமன்றமும் நீடித்து இருக்கிறது. இந்த நிலையில் எட்டுவழிச்சாலையை அமைத்தே தீருவேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசி வருவதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ச்சியான ஒரு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும் மார்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

தற்போது புரட்சிகர சோசலிஸ்ட் கட்சிகள் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இவர்களை  பொறுத்தவரையில் விவசாயத்தை அழித்து எட்டுவழிசாலையை கொண்டு வர கூடாது என்றும் குறிப்பாக தமிழக முதல்வர் இதற்கு முனைப்பு காட்டுவது எதற்காக, யாருக்காக இந்த சாலை போடப்படுகிறது என்றும் மேலும் உச்சநீதிமன்றமும்,உயர்நீதிமன்றமும் இந்த சாலைக்கு தடை விதித்திருக்கும் போது முதல்வர் இந்த சாலையை போட்டே தீருவேன் என்று முனைப்பு காட்டுவது எதற்காகத்தான் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்த எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Farmers fight protest ,Salem Eight Vavarachchi , Salem, Eight Violence Project, Opposition, Farmers, Struggle
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...