×

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு: ஜாமின் கேட்டு இடைத்தரகர் லீலா 5வது முறையாக மனு தாக்கல்

ராசிபுரம்: ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் சிறையில் உள்ள இடைத்தரகர் லீலா ஜாமின் கேட்டு 5வது முறையாக மனுதாக்கல் செய்துள்ளார். நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லீலா தாக்கல் செய்த ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பேரம் பேசி குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், நந்தகுமார், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி செவிலியர் பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உதவியாளர் சாந்தி, பெங்களூரு அழகுகலை நிபுணர் ரேகா மற்றும் இடைத்தரகர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி, செல்வி என 11 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, இவர்களின் நீதிமன்ற காவல் கடந்த 6ம் தேதியோடு முடிவடைந்த நிலையில், 11 பேரையும் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி அமுதவள்ளி உள்பட 11 பேரின் நீதிமன்ற காவலை வருகிற 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இடைத்தரகர் லீலா ஜாமின் கேட்டு 5-வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த மே மாதம் இடைத்தரகர்கள் அருள்சாமி, லீலா, செல்வி ஆகியோர் ஜாமின் கோரி நாமக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை மே15ம் தேதி விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Rasipuram ,leela , Rasipuram, child sale case, leela, bail petition
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து