×

விபத்துகளை தடுக்க சேதமடைந்த முத்துப்பேட்டை- கோவிலூர் ரவுண்டானா உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்கப்படுமா?

முத்துப்பேட்டை: விபத்துகளை தடுக்க சேதமடைந்த முத்துப்பேட்டை - கோவிலூர் ரவுண்டானா மற்றும் உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியை கடந்து செல்லும் கிழக்கு கடற்கரை சாலை சுமார்10ஆண்டுக்கு முன் புதியதாக உருவாக்கப்பட்டது. இதில் முத்துப்பேட்டை டவுனை ஒட்டியுள்ள இந்த சாலை மேற்கில் செம்படவன்காடு பகுதியிலும் கிழக்கில் ஆலங்காடு பகுதியிலும் பிரிந்து செல்கிறது. இந்த சுமார் 2கிமீ தூரம் உள்ள இந்த சாலை இப்பகுதிக்கு பைபாஸ் சாலையாகவும் இருந்து வருகிறது. அதேபோல் இந்த சாலையில் தெற்கில் முத்துப்பேட்டை, வடக்கில் மன்னார்குடி, கிழக்கில் திருத்துறைப்பூண்டி, மேற்கில் பட்டுக்கோட்டை என நான்கு சாலைகள் பிரிந்து செல்லும் பகுதியில் கோவிலூரில் மிக பிரமாண்டமான ரவுண்டானா மற்றும் சுற்றுசுவர்அமைக்கும் பணி பல கோடி மதிப்பீட்டில் நடந்தது. இதில் முறைகேடுகள் நடந்து பணிகள் முழுமை பெறாமல் இருக்கிறது.

அதேபோல் ரவுண்டானா அமைத்து சாலைகளை பிரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர்களும் போதிய தரம் இல்லாததால் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த ரவுண்டானா மற்றும் தடுப்பு சுவர்களில் போதிய சிக்னல் போர்டு, சிக்னல் வர்ணம் மற்றும் ரிப்ளக்ட் ஸ்டிக்கர்கள், பெயிண்ட் ஆகியவைகளை பொருத்தி தரவேண்டும் என்று பல மாதங்களாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இனிமேலாவது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். பேரூராட்சி சார்பில் ரவுண்டானா நடுவில் உயர் கோபுரமின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த உயர கோபுர விளக்கால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்ததுடன் இப்பகுதியில் செல்லும் மக்களுக்கும் மிகவும் பயனாக இருந்தது. இந்தநிலையில் கடந்ா ஆண்டு நவம்பர்15ம்தேதி நடந்த கஜா புயலின் தாக்கத்தால் இந்த உயர கோபுர மின் விளக்கு முறிந்து விழுந்தன. இதனை சீரமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த ஆறு மதங்களுக்கு மேலாக பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே இனியும் விபத்துகள் ஏற்படாமல் இருக்க காலதாமதம் படுத்தாமல் உயர கோபுர மின்விளக்கை பேரூராட்சி நிர்வாகம் உடன் சரி செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் மாவட்ட செயலாளர்சதீஸ்குமார் கூறுகையில்: கஜா புயல் பாதிப்படைந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இந்த கோபுர விளக்கை பேரூராட்சி சீரமைக்க முன்வரவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பயனில்லை. இனியும் காலதாமதப்படுத்தினால் விரைவில் பேரூராட்சியை கண்டித்து நூதனப்போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றோம் என்றார்.

Tags : accidents ,Muthupettai-Kovilur Roundana , electric light
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி