×

காவிரிக்கரையோரத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு... மாவட்ட நிர்வாகம் தடை விதிக்குமா?

ஈரோடு: காவிரிக்கரையோரத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு அடுத்துள்ள பெரிய அக்ரஹாரம் அருகில் காவிரி ஆற்றுக்கும், காலிங்கராயன் வாய்க்காலுக்கும் இடைப்பட்ட பகுதியில் விவசாய நிலத்தில் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் பொது சுத்தகரிப்பு நிலையம் அமைக்க மாசுகட்டுப்பாடு வாரியம் இடம் தேர்வு செய்துள்ளது.

நீர்நிலைகளை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகள் நீர் நிலைகளில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு இயங்க கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் விதிமுறை மீறி காவிரி, காலிங்கராயன் நீர்நிலைகளுக்கு அருகில் பொதுசுத்தகரிப்பு நிலையம் அமைக்க விவசாயிகள், பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சூரியம்பாளையம் பொதுமக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சாய, சலவை, தோல் தொழிற்சாலைகளில் கழிவு நீரை சுத்தகரிப்பு செய்ய ரூ.700 கோடியில் பொது சுத்தகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய,சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்தகரிப்பு செய்ய ஈரோடு அடுத்துள்ள அக்ரஹாரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாசுகட்டுப்பாடு வாரியம் தேர்வு செய்துள்ள இடமானது காவிரி ஆற்றுக்கும், காலிங்கராயன் பாசன வாய்க்காலுக்கும் இடையே உள்ளதால் நீா்நிலைகள் மாசுபடும் அபாயம் உள்ளது. நீர்நிலைகள் அருகே தொழிற்சாலைகள் தொடங்க அரசு தடை விதித்துள்ளது. விதிமுறை மீறி விவசாய பூமி இருக்கும் இடத்தில் பொதுசுத்தகரிப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் கருத்துக்களை கேட்ட பிறகு யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : District Administration , Cauvery, refinery
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்