×

காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சோபியான் மாவட்டத்தின் ஆவ்நீரா என்ற கிராமத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வந்தது. இந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அதிகாலை முதலே அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அவர்களை தேடும் வேட்டையில் பாதுகாப்பபு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். புல்வாமா தாக்குதலையடுத்து ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளில் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினரும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இருதரப்பிலும் தொடர் உயிரிழப்புகள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு லஸ்சிபோரா பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஏகே ரக துப்பாக்கிகளை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

Tags : terrorists ,gunmen ,Kashmir ,Sophia , Security, gunfight, terrorists, killed
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...