போலி வங்கி கணக்கு வழக்கில் பாக். முன்னாள் அதிபர் கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலி வங்கிக் கணக்கு மோசடி வழக்கில் முன்னாள் அதிபர் சர்தாரியை ஊழல் தடுப்பு பிரிவு கைது செய்தது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி. இவரது சகோதரி பர்யால் தால்பூர். இருவரும் போலி வங்கிக் கணக்கு தொடங்கி மோசடி செய்ததாக  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ரூ.15 கோடியை போலி வங்கிக் கணக்கு மூலமாக வெளிநாட்டுக்கு பரிமாற்றம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவரது ஜாமீன் மனுவையும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. ஞாயிறன்று அவர்களுக்கு எதிராக வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று தனது வீட்டில் இருந்த ஆசிப் சர்தாரி கைது செய்யப்பட்டார். அவரது சகோதரி பர்யால் தால்பூர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

× RELATED நீட் தேர்விலிருந்து தமிழக...