×

வாஷிங்டனில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்க 2500 பேர் பதிவு

வாஷிங்டன்: வாஷிங்டன்னில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இதுவரை 2500 பேர் பதிவு செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதன்படி கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி முதல் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாளில் கல்வி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள் என ஒவ்வொரு மாநிலத்திலும் யோகா பயிற்சிகள் செய்யப்படும்.

5வது சர்வதேச யோகா தினம், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கடைபிடிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு வருகிற 16ம் தேதி சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்கு இதுவரை 2500 பேர் பதிவு செய்துள்ளனர். இது குறித்து இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், “5வது சர்வதேச யோகா தினத்துக்கு வலுவான ஆதரவு கிடைத்துள்ளது. இதுவரை 2500 பேர் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளனர். இந்திய தூதரகம் மற்றும் 20 அமைப்புக்கள் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. அனைத்து தூதர்கள் மற்றும் ஐநா பிரதிநிதிகள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் நாடாளுமன்ற எம்பிக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். யோகா நிகழ்ச்சியை தொடர்ந்து மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சைவ உணவு திருவிழா நடைபெறும்” என்றார்.

Tags : event ,Washington ,Yoga Day , Around 2500 people ,Yoga Day event ,Washington
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐநா பொதுச்செயலாளர் கருத்து